பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஆதரவு!

ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று இபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம், இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,452ஆக உயர்ந்துள்ளது. அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்க…

ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று இபிஎஸ் க்கு ஆதரவு
தெரிவித்தனர். இதன் மூலம், இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,452ஆக உயர்ந்துள்ளது.

அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்க கூடிய நிலையில், கடந்த 23ம்
தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் போது எடப்பாடிக்கு 2,190 பொதுக்குழு
உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு
நிலைபாட்டில் இருந்த உறுப்பினர்கள் படிப்படியாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு நிலைக்கு திரும்பினர். நேற்று வரை எடப்பாடிக்கு, 2443 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, இன்று ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் இருந்து மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் இபிஎஸ் ஆதரவு எண்ணிக்கை 2,452 ஆக அதிகரித்தது. இதனால் ஓபிஎஸ் ஆதரவு எண்ணிக்கை மேலும் குறைந்தது.

தேனி மாவட்டத்திலிருந்து இன்று மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிக்கு பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியை
சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை தேனி மாவட்ட பொருளாளர் சோலை ராஜா,
மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, கம்பம் முன்னாள் ஒன்றிய செயலாளர் இளையநம்பி உள்ளிட்டோர் முன்னாள் எம்ல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் ஆதரவு தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.