டிக்டாக் புகழ் ஜிபி முத்து விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக திரைப்பட நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
நடிகை சன்னிலியோன் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் நடிகைகள் சன்னி லியோன், தர்ஷா குப்தா, நடிகர்கள் சதீஷ், ஜிபி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஜிபி முத்து, முதன்முறையாக திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும், ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தில் நல்ல கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய நடிகை தர்ஷா குப்தா, ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படம் அருமையாக வந்துள்ளதாக தெரிவித்தார். ஆண்டுக்கு ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பது தனது கனவு என்றும், இந்தாண்டு ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி எனவும் கூறினார்.
சன்னிலியோன் தான் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் எல்லாம் என்றும், மற்ற அனைவரும் அப்படத்தில் ஓர் அங்கம் எனவும் நடிகர் சதீஷ் தெரிவித்தார். ஜி.பி.முத்து விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
இறுதியாக மேடையில் பேசிய நடிகை சன்னி லியோன், இயக்குநரின் தமிழும் தனது ஆங்கிலமும் சேர்ந்து ஓ மை கோஸ்ட் திரைப்படம் அருமையாக வந்துள்ளதாக தெரிவித்தார். அனைவரும் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.