கயிற்று கட்டில் வாகனத்தில் சவாரி: ஆனந்த் மஹேந்திரா பகிர்ந்த வீடியோ!

தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா பகிர்ந்துள்ள கயிற்று கட்டில் வாகன வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது,  தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா பதிவிடும் பதிவுகளுக்கு சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  நகைச்சுவை, இந்தியாவில் பயணிக்க வேண்டிய…

தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா பகிர்ந்துள்ள கயிற்று கட்டில் வாகன வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது, 
தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா பதிவிடும் பதிவுகளுக்கு சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  நகைச்சுவை, இந்தியாவில் பயணிக்க வேண்டிய இடங்களின் பட்டியல், வனவிலங்குகள் தொடர்பான அவரின் வீடியோவிற்கு ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்நிலையில் அண்மையில் கயிற்று கட்டில் வாகனம் தொடர்பான வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கயிற்று கட்டிலை சீட்டாக கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டி வருகிறார்.
இந்த வீடியோவை 10 நண்பர்கள் எனக்கு அனுப்பி இருப்பார்கள். ஆனால் அதனை நான் ரீ ட்வீட் செய்யவில்லை. அதின் உண்மைதன்மை குறித்து சந்தேகம் இருந்தது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தது. அதனால் அதை  பதிவு செய்யவில்லை.
எனினும் கிராமப்புறங்களில் மருத்துவ தேவை ஏற்படும் போது  இந்த வாகனம் பலரின் உயிரை காப்பாற்ற உதவும் என்ற நோக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளதாக ஆனந்த் மஹேந்திரா தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை சுமார் 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 1200 பேர் லைக் செய்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.