முக்கியச் செய்திகள் இந்தியா

இனி விலங்குகளை துன்புறுத்தினால் 5 ஆண்டு சிறை!

கடுமையான அபராதம், தண்டனை வழங்கும் வகையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

விலங்குகளை காயப்படுத்தினாலோ அல்லது கொன்றாலோ இனி 50 ரூபாய் அபராதம் செலுத்துவதன் மூலம் தப்பிக்க முடியாது. ஏனெனில், 60 வருடப் பழமையான விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வரைவு அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருகிறது.

அதன்படி, விலங்கைக் கொன்றால் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது விலங்கின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிக அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டும் விதிக்கப்படும்.

சிறிய காயம், நிரந்தரமாக முடக்கிவிடும் பெரும் காயம், விலங்கின் மரணம் என இந்த சட்ட முன்வடிவில் குற்றங்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து 750 ரூபாய் முதல் 7, 500 ரூபாய் வரை அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும். தற்போது இருக்கும் சட்டம் விலங்குகளை துன்புறுத்தினாலோ, அடித்தாலோ, அதிகமான பாரத்தை சுமக்க வைத்தாலோ 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கால்நடைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், விலங்குகள் மீதான கொடுமையை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது. இதற்காக கடுமையான அபராதங்களை விதிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளன எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும், சட்ட முன்வடிவை பொதுவெளியில் வெளியிட்டு பொதுமக்கள், வல்லுனர்கள் கருத்து கேட்டு ஆராய்ந்த பிறகே சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 4,013 பேருக்கு கொரோனா

Gayathri Venkatesan

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

Saravana Kumar

கொரோனா பரவல்; இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33,000 டன் மருத்துவக் கழிவுகள் சேகரிப்பு!

Saravana

Leave a Reply