முக்கியச் செய்திகள் தமிழகம்

இலவசங்களை கொடுத்து மக்களை அரசு ஏமாற்றுகிறது- சீமான்

நாங்கள் எதை கேட்கிறோமோ அதை இந்த அரசு செய்யவில்லை. ஆனால் இலவசங்களை கொடுத்து இந்த அரசு மக்களை ஏமாற்றுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் திங்கள் சந்தை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இதில் தலைமையேற்று கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, நாம் வணங்குகிற சாமியை விட இந்த பூமி மேலானது என்பதால் தான் இந்த போராட்டத்தை முன் எடுத்துள்ளோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எல்லா நிலையிலும் நாம் தமிழர் கட்சி தொடர் போராட்டத்தை முன் எடுக்கிறது என்றால் அதற்கு தள்ளப்பட்டது யார் ? இவை எல்லாமே எங்கள் மீது திணிக்கப்பட்ட போராட்டம். நாங்கள் விரும்பி போராட வில்லை. பேராசைகாரர்களிடம் இருந்தது எங்கள் பூமி தாயை காப்பாற்ற தான் நாம் தமிழர் களத்தில் நிற்கின்றன என்றும் இந்த போராட்டத்திற்கு அனுமதி அளித்தவர் அளிக்காதவர், என எல்லாருக்குமானது இந்த
போராட்டம்.

ஒரு நாட்டின் வளம் என்பது அந்த நாட்டின் மலைகளை பொறுத்தது தான். இதை பற்றி இங்குள்ள எந்த அரசியல் வாதிகளும் படித்திருக்கமாட்டார்கள். மேலும் இந்த மலைகளை கொண்டு செல்லும் போது காங்கிரஸ், பாஜக, திமுக எங்கு சென்றன என்று கேள்வி எழுப்பிய அவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதே திமுக தான் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து விழிஞனம் துறைமுகத்திற்கு குமரியில் இருந்து கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு இப்போ தான் மீனவ மக்கள் விழிப்பு அடைந்து போராட்டத்தை துவங்கி உள்ளனர் என்றார்.

தேங்கப்பட்டினத்தில் மீன் பிடி துறைமுகம் தான் மீனவர்கள் கேட்டனர். எடப்பாடி நேரில் கூட வரல அவர் திறந்து வைத்தார். இங்கு 27 பேர் பலியாகி உள்ளனர். தேங்கப்பட்டினம் மீன் பிடி துறைமுக பொழி முகத்தில் தேங்கி உள்ள மணலை அள்ள கேட்கிறோம் அது அள்ளல. ஆனால் கடற்கரையில் உள்ள மணலை அள்ள கூடாது என்கிறோம்
அதை அள்ள அரசு முயற்சி செய்கிறது. நாங்கள் எதை கேட்கோறோமோ அதை அரசு செய்யவில்லை எனவும், இலவசம் கொடுத்து 50 ஆண்டுகால இந்த இரு கட்சிகளும் மாறி மாறி கொடுத்து ஏமாற்றி வருகிறது என்று குற்றம்சாடினார்.

மேலும், அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்கமால் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். கமிஷன் அதிகம் பெறவே ஆட்சியாளர்கள் அதிக இலவச திட்டங்களை கொண்டு வருகின்றனர். ஒரு குடும்பத்தை நடத்த முடியாமல் மக்கள் திணறும் நிலை இந்த ஆட்சியில் நடந்து வருகிறது என்றார்.

இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவம் கடை கோடியில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் அது தான் இலவசம். மிக்சி, கிரைண்டர் அல்ல. எல்லத்தையும் இலவசமாக கொடுக்கும் அரசு தண்ணீரை மட்டும் விற்பனை செய்து வருகின்றது என்று கூறினார்.

உயர் நிறுவனங்களுக்கு கொடுக்கும் தடையற்ற மின்சாரத்தை மக்களுக்கு கேட்கிறோம். எங்களுக்கு இலவச பேருந்து வேண்டாம். படித்து விட்டு லட்ச கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இலவசம் பெறாமல் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளுங்கள். ஒரு நாள் ஒரு கிலோ அரிசி வாங்கி வழி இல்லாத நிலைக்கு தள்ளி விட்டனர். இந்த சேவல் தற்போது கூண்டுக்குள் இருந்து கூவுகிறது. ஓரு நாள் கூரை மேல் இருந்து கூவும் அப்போது அதிகாரம் கைக்கு வரும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

Halley Karthik

குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

Jeba Arul Robinson

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

G SaravanaKumar