சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநர் கைது !!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி அருகே ஓபுளாபுரம் பகுதியை சேர்ந்த நாராயணசாமி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர்…

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழனி அருகே ஓபுளாபுரம் பகுதியை சேர்ந்த நாராயணசாமி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகே வசித்து வந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அருகாமையில் உள்ள பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டுநர் நாராயணசாமியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் ஓட்டுநர் நாராயணசாமி  பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டதால் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நாராயணசாமி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.