சிலம்பரசன் நடிப்பில் வெளியான பத்துதல படத்தினை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
சிலம்பரசன் நடிப்பில் பத்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவான பத்து தல திரைப்படம் கடந்த 30ம் தேதி வெளியானது. இதில் இந்த படத்தில் சிம்புவுடன், கெளதம் கார்த்திக்,பிரியா பவானி சங்கர், கலையரசன், ஜோ மல்லூரி, கெளதம் வாசுதேவ் மேனன், டீஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பத்து தல படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எங்களின் ‘பத்து தல’ திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 500 திரையரங்குகளிலும் இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. எங்களின் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக, சிலம்பரசன் (STR) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு முழு மனதுடன் எங்களது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறோம்.
‘பத்து தல திரைப்படம் சிலம்பரசனின் திரைப்பயணத்தில் அதிக வருவாயை ஈட்டிய ஒரு படமாக மட்டுமல்லாமல், எங்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் லாபம் தந்திருக்கக்கூடிய படமாகவும் அமைந்ததுள்ளது. சிலம்பரசன் (STR) இந்தப் படத்தின் ஒரு முக்கியமாக அங்கமாக இருந்து, அவரது சிறப்பான ஆதரவைக் கொடுத்து உதவியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியில் எங்கள் படத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு அளித்து, பல வாரங்களாக முதலிடத்தில் இருக்கும் சார்ட்பஸ்டர் பாடல்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் அருமையான பின்னணி இசை, இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மற்றும் பிற புரோமோஷன்களில் ஒரு பகுதியாக இருந்தது படத்திற்கு பெரிதும் உதவியது.
ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே பாஷா, எடிட்டர் பிரவீன் கேஎல், கலை இயக்குநர் மிலன். ஆடை வடிவமைப்பாளர் உத்ரா மேனன், வசனம் எழுதிய ஆர்.எஸ். ராமகிருஷ்ணன். ஆடியோகிராஃபர் எஸ்.சிவக்குமார், சவுண்ட் டிசைனர் கிருஷ்ணன் சுப்ரமணியன். ஆக்ஷன் கோரியோகிராஃபர் சக்தி சரவணன், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் என இந்தப் பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து பொறுமையாக பயணித்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எங்கள் நன்றி என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.









