மிகவும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது கோவிஷீல்டு! – லான்செட் ஆய்வில் தகவல்!

கோவாக்சினுடன் ஒப்பிடுகையில், கோவிஷீல்ட் தடுப்பூசியில் மிகவும் வலுவான நோய் எதிர்ப்பு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த…

கோவாக்சினுடன் ஒப்பிடுகையில், கோவிஷீல்ட் தடுப்பூசியில் மிகவும் வலுவான நோய் எதிர்ப்பு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில்,  ஏராளமானோர்  உயிரிழந்தனர்.  இதனால்,உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு போடபட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டது. இதையடுத்து,  கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள் : தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்?

இதையடுத்து,  புனேவில் உள்ள லான்செட்  நிறுவனத்தில் விஞ்ஞானிகள் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.  இந்த ஆய்வு 11 நிறுவனங்கள் கொண்ட குழுவால் மேற்கொள்ளப்பட்டது.  இந்த ஆய்வில்,கொரோனா தொற்று நோய் போது போடப்பட்ட தடுப்பூசிகளான கோவாக்சினை விட கோவிஷீல்ட் சிறப்பாக செயல்பட்டது என்று முதல் ஒப்பீட்டு ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புனே (IISER),  தேசிய கெமிக்கல் ஆய்வகம் (NCL),  உயிரணு அறிவியலுக்கான தேசிய மையம் (NCCS) மற்றும் புனே அறிவுக் கிளஸ்டர் உட்பட புனேவில் இருந்து 6 நிறுவனங்கள் இந்த ஆய்வில் கலந்துக் கொண்டன. இந்த ஆய்வு இரண்டு தடுப்பூசிகளின் ஒப்பீட்டுத் தரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நோய் எதிர்ப்பு மதிப்பீட்டிற்குத் தேவையான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கவும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஜூன் 2021 முதல் ஜனவரி 2022 வரை மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில்,  இந்தியாவில் உள்ள 18 முதல் 45 வரையிலான வயதுக்குட்பட்ட 691 நபர்களிடம் மதிப்பீடுகள் செய்யப்பட்டது.  அந்த நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பதிவுகளை முதலில் ஆய்வு செய்தனர்.  பின்னர், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கண்காணித்தது ஆய்வை மேற்கொண்டனர்.  ஆய்வின் முடிவில், கோவாக்சினுடன் ஒப்பிடுகையில், கோவிஷீல்ட் மிகவும் வலுவான நோய் எதிர்ப்பு அதிக அளவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.