“ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது” – எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்

ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில், இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஆளுநர் உரையாற்றும் போது, அ.தி.மு.க.எம் எல்.ஏக்கள்…

ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில், இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஆளுநர் உரையாற்றும் போது, அ.தி.மு.க.எம் எல்.ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் பங்கேற்றனர். பேரவை கூட்டம் நிறைவு பெற்றதும், அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகள் எதுவும், ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். தேர்தல் பரப்புரையின்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும், என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார் என கூறிய அவர், ஆளுநர் உரையில் அதற்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சு என திமுக அரசு செயல்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து, எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக கூறியதையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.