முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை – வைகோ விமர்சனம்

தமிழ்நாடு ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டியளித்தார். அப்போது, இந்துத்துவா கருத்துக்களை தமிழ்நாட்டில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சங்க பரிவார் இயக்கங்கள் முயற்சி செய்கின்றனர். அதற்கு உறுதுணையாக ஆளுநர் ஆர்.என் ரவியும் பேசுகிறார் என குற்றம்சாட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

திருக்குறளை பற்றி ஆல்பார்ட் ஸ்விட்சர்ரை விட ஆராய்ச்சி செய்துவிட முடியாது. உலகில் இப்படி ஒரு பொதுவான நூல் இல்லை என்று நோபல் பரிசு பெற்ற அவரே கூறியிருக்கும் நிலையில், திருக்குறளை பற்றி தெரியாமல் ஆளுநர் பேசுவதாக தெரிவித்தார். ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை என்றும் வைகோ விமர்சனம் செய்தார்.

ஜி.யூ போப்பும் திருக்குறளை சரியாக மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால் இங்கு இருக்கிற கூட்டம் திட்டமிட்டு பேசி வருகின்றனர். அதற்கு ஆளுநர் துணை போவது
மிகவும் துரதிஷ்டமான செயலாகும் என்றார். தமிழக அரசு அனுப்பி உள்ள 14 சட்ட மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். தமிழக அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்க முயற்சி செய்கிறார்.

 

நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, அவர்கள் மனம் போன போக்கில் எல்லாம் பேசுகிறார்கள் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘பாஜகவுக்கு விரைவில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்’

Arivazhagan Chinnasamy

இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Gayathri Venkatesan

நெல்லை: பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

EZHILARASAN D