தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மேகாலயாவில் இன்று தொடங்கும் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப்…

தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மேகாலயாவில் இன்று தொடங்கும் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக சக வீரர்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஷ்வா தீனதயாளன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவருடன் சென்ற மற்ற வீரர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஷ்வா தீனதயாளனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ, மேகாலயா முதலமைச்சர் கொன்ராட் சங்கா, டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த விஷ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு ஹரியானா துணை முதலமைச்சர் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.