முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

” மணிப்பூரில் கலவரம் நடப்பதை அரசே விரும்புகிறது “- சீமான் குற்றச்சாட்டு

” மணிப்பூரில் கலவரம் நடப்பதை அரசே விரும்புகிறது “என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மணிப்பூர் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை, வெறியாட்டங்களைத் தடுக்க தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்ததாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

” மணிப்பூர் கலவரத்தை மிக எளிதாக கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். அந்த மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வு அதிகமாக நடைபெற்றுள்ளது. வன்முறை வெறியாட்டங்கள் வெளியில்  தெரியக்கூடாது என்பதற்காக இணையதள சேவையை முடிக்கினர். மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்டது தேச அவமானம். மனித தன்மை இல்லாமல் வன்முறை நிகழ்த்தியுள்ளனர். மணிப்பூர் வன்முறை அங்குள்ள  வளங்களை கொள்ளையடிக்கவே நடைபெற்றுள்ளது.

தேர்தல் லாபம் மற்றும் அரசியல் கணக்கை வைத்துத்தான் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. உலகில் எங்கு காயம் பட்டாலும் தமிழர்கள் தான் முதலில் அழுகிறார்கள். நாங்கள் மதத்தின் பக்கம் இல்லை மானுடத்தின் பக்கம் இருக்கிறோம். வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு வலி கிடையாது.

என்எல்சி விவகாரத்தில் அரசு விவசாயிகளுக்கு நிலங்களை கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்களோ அதுதான் திமுக ஆட்சியில் செய்து வருகிறார்கள். பாஜக கலவரத்தை வேடிக்கை பார்ப்பவர்கள். என்எல்சி விவகாரம் ஒரு கொடுங்கோன்மை. பாஜக நடைபயணம் செய்வது கோவிலுக்கு சென்றாலும் ஏதேனும் பலன் கிடைக்கும் இதனால் எந்த பலனும் கிடைக்காது. அரசு இந்த மணிப்பூர் மோதலை அதிகமாக விரும்பி வருகின்றனர்.

மணிப்பூர் கலவரத்தை அரசு விரும்புகிறது அதனால்தான் அது நடைபெற்றது. பாஜக கலவரத்தை விரும்புவதற்கான காரணம் என்னவெனில் கலவரத்தை நடத்தி இவர்கள் ஆட்சிக்கு வந்தவர்கள். காடுகளில் உள்ள வளங்களை அபகரிக்க தான் இந்த கலவரம் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் போர், கலவரம் நடைபெறுவதற்கு காரணம் வனக் கொள்ளை மற்றும் வன வேட்டை தான். பழங்குடியின மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் அதனால் தான் அவர்களுக்கு என்ன நடந்தாலும் அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பாஜக-வினர் பொதுமக்களை ஒரு ஓட்டாக தான் பார்க்கிறார்களே தவிர ஒரு உயிராக பார்க்கவில்லை.

தேச ஒற்றுமையைப் பற்றி பேச தகுதியற்றவர்கள்தான் திரும்ப, திரும்ப தேச ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்கள். மணிப்பூர் கலவரம், குஜராத் கலவரம் மற்றும் இனப்படுகொலையைப் பற்றி பேச தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியில் நேர்மையான கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.” என சீமான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மம்மூட்டி – ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் – தி கோர்’ படம் எப்போது வெளியாகும்? – லேட்டஸ்ட் அப்டேட்!

Web Editor

ஷவர் வசதியுடன் கூடிய A/C பெட்டி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசன்கள் விமர்சனம்….!

Web Editor

விலை உயர்ந்த சைக்கிளை திருட வந்த போது நாயுடன் விளையாடிய திருடன்! வீடியோ வைரல்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading