ஜெயிலர் படத்தில் வெளியான முதல் பாடலான ’காவாலா’ பாடலை பயன்படுத்தி யூடியூபில் 5 லட்சம் ஷார்ட்ஸ் (Shorts) பகிரப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக.10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
இந்தப் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ கடந்த ஜூலை 8-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதில் தமன்னா நடனமும், ரஜினியின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடல் இணையதளத்தில் இன்றுவரை வைரலாகி வருகிறது. தமன்னா தாறுமாறாக ஆடிய இப்பாடல் இணையத்தில் செம வைப் மெட்டீரியலாக மாறி உள்ளது.
https://twitter.com/sunpictures/status/1685556241982984193
காவாலா பாடல் வெளியாகி 3 வாரங்கள் ஆகிய நிலையில் 8.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. தற்போது படக்குழு இந்த பாடல் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி காவாலா பாடலை பயன்படுத்தி யூடியூபில் 5 லட்சம் ஷார்ட்ஸ் (Shorts) பதிவிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இன்று வரை ’காவாலா’ பாடல் இணையத்தை கலக்கி வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.







