பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் பெண்ணின் வயிற்றிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெரியகுளம் வடகரை பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவர் ஒரு கூலி தொழிலாளி அவரின் மனைவி வீரலட்சுமி 43 வயது இவர் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் வேதனையால் அவதியுற்ற வந்த நிலையில் தாக்க முடியாத வயிற்றுவலியால் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சோதனை மேற்கொண்ட பொழுது அவரது சினைப்பையில் 6 கிலோ அளவிலான கட்டி இருப்பதை கண்டறிந்தனர் இதனை தொடர்ந்து இன்னும் காலம் தாமதம் ஏற்படுத்தினார் வீரலட்சுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்ததா உடனடியாக வீரலட்சுமியின் வயிற்றில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் திலகவதி.பாபு வெங்கடேஷ். கணபதி. கதிரேஸ் ஆகியோரின் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வயிற்றிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி சாதனை படைத்தனர்.
எதனால் இவ்வாறான கட்டி உருவானது இது எந்த வகையான நோய்க் கட்டி என்பதனை அறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த கட்டியை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது







