பிரசித்தி பெற்ற கோவை சாய்பாபா கோவிலில் 78வது வருட மகா தரிசன விழா!

கோவையில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலில் 78வது வருட மஹா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையில் பிரசித்தி ஸ்ரீ சாய் பாபா திருக்கோவிலில் 1943ஆம் வருடம் ஜனவரி மாதம் ஏழாம் நாள்…

கோவையில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலில் 78வது வருட மஹா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் பிரசித்தி ஸ்ரீ சாய் பாபா திருக்கோவிலில் 1943ஆம் வருடம் ஜனவரி மாதம் ஏழாம் நாள் வியாழன் அன்று ஸ்ரீ சாய் பாபா படத்திற்கு முன் நாக தோற்றத்தில் சாய்பாபா காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் சாய்பாபாவின் மகா தரிசன விழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமம், பஜனைப்பாடல்கள், மகா அபிஷேகம் என தரிசன விழா களைகட்டியது. இதனை ஒட்டி சிறப்பு சாய் பாபாவிற்கு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதையடுத்து தரிசனம் விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன

மேலும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அரசின் வழிகாட்டுதலுடன் படி நடைபெற்ற விழாவில் சாய்பாபாவை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply