பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் வரும் 18 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக சென்னை வாசகர் வட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டையில் சென்னை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் புகழேந்தி மற்றும் நாகராஜன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சென்னை நந்தம்பாக்கம் எதிரே உள்ள Pmac expo hall-ல் நடைபெறும் புத்தக கண்காட்சியில் 1000 தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.
55 அரங்குகளுடன் அமையும் இந்த கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10% கழிவு வழங்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். முக கவசம் இல்லாமல் அனுமதி இல்லை என தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வெப்ப பரிசோதனை,கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புகளும் நடைமுறைப்படுத்தப்படும் என கூறினர்.







