அரசு வேலை மோசடி புகார்: லாலு பிரசாத் மகள் வீட்டில் சிபிஐ சோதனை

அரசு வேலை வாங்கி தருவதாக எழுந்த மோசடி புகார் தொடர்பாக லாலு பிரசாத் யாதவின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ்…

அரசு வேலை வாங்கி தருவதாக எழுந்த மோசடி புகார் தொடர்பாக லாலு பிரசாத் யாதவின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பின்னர் அவரின் உடல்நிலை காரணமாக பீகார் உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வேத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், ரயில்வே துறையில் வேலை கோரியவர்களிடம் இருந்து அரசு வேலைக்கு ஈடாக நிலம் வாங்கப்பட்டதாகவும், இதனால் பீகாரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதான சொத்துக்கள் யாதவ் குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டதாகவும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில நபர்கள் சிபிஐக்கு புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக எழுந்த மோசடி புகாரையடுத்து லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பார்தி ஆகியோருடன் தொடர்புடைய 17 இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று சோதனை நடத்தியது.

பாட்னா, கோபால்கஞ்ச் மற்றும் டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு, அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் மிசா ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் உட்பட பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ அதிகாரி ஒருவர், “லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ​​சில நபர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் ஆரம்பகட்ட விசாரணை தற்போது எஃப்ஐஆராக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.