முக்கியச் செய்திகள் தமிழகம்

மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணி; பணி ஆணையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

பாராலிம்பிக்கில் வெள்ளிவென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மாரியப்பன் தனக்கு அரசாங்க வேலை வழங்கவேண்டுமென நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வழியாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன் எதிரொலியாக, அவருக்கு தற்போது தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பணி ஆணையை பெற்ற பின்னர், செய்தியாலர்களை சந்தித்த மாரியப்பன் தங்கவேல் “எனது கோரிக்கையை ஏற்று பணி வழங்கிய முதல்வருக்கும், துணை நின்ற அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

உள்ளாட்சித் தேர்தல்: காஞ்சிபுரத்தில் பரப்புரை தொடங்கும் கமல்ஹாசன்

Ezhilarasan

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Saravana Kumar

மத்திய முன்னாள் அமைச்சர் அஜித் சிங் காலமானார்

Halley karthi