இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.
வணக்கம், எனக்கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவை மிகப்பெரிய பாரம்பரியங்களைக் கொண்டது என தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும், ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார்.
மேலும், சமீபத்திய ஆய்வு முடிவில், நாட்டின் சிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். சென்னை உள்ளிட்ட நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்ததாகவும், இருப்பினும், நீர்த்தேக்கங்களில் இருந்து முன்கூட்டியே நீர் திறந்துவிடப்பட்டு பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
https://twitter.com/news7tamil/status/1478592240721092609
ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது எனவும், விவசாயிகளின் வளர்ச்சிக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.







