காரைக்காலில் பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்து – கரகாட்டக்காரன் படப்பாணியில் தள்ளிய பயணிகள்!

காரைக்காலில் திடீரென பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை பயணிகள் தள்ளிக் கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி கடந்த 15 ஆண்டுகளைக் கடந்த அரசு மற்றும்…

காரைக்காலில் திடீரென பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை பயணிகள் தள்ளிக் கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி கடந்த 15 ஆண்டுகளைக் கடந்த அரசு மற்றும் பொதுத்துறை வாகனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.  இதனால் புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழகமான பி.ஆர்.டி.சி.22 பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், காரைக்காலில் 30 பேருந்துகளில் 16 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று காரைக்காலிலிருந்து அம்பத்துார் செல்லும் பி.ஆர்.டி.சி நகர பேருந்து, பேருந்து நிலையத்தின் சிறிது துாரத்திலேயே பழுதாகி நின்றது.  ஓட்டுநர் முயற்சித்தும், பயணிகள் தள்ளியும் ஸ்டார்ட் ஆகவில்லை.  அப்போது அங்கிருநதவர்கள் தள்ளு,தள்ளு என்று கூச்சலிட்டவாரு தள்ளி பேருந்து நிலையம் உள்ளே வரை தள்ளி நிறுத்தி வைத்தனர்.
இதன் வீடியோ சமூக வளைதளங்களில் பதிவிட்டு கரகாட்டக்காரன் படத்தில் வரும் பாணியில் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டும், கேலி செய்தும் வருகின்றனர்.
—-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.