அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம்: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்  முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கின. தமிழ்நாட்டில் உள்ள 164  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.…

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 
முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கின.
தமிழ்நாட்டில் உள்ள 164  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதில் மாணவர்களின் எண்ணிக்கை  36626. மேலும் 48273 மாணவிகளுக்கு இடம் கிடைத்துள்ளது.  இந்நிலையில்  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள்  இன்று தொடங்கின.
அதற்காக சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில்  புதியவர்கள் நாள் ( freshers day )நிகழ்ச்சி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு  கல்லூரி வரலாறு , ஒழுங்கு முறை நன்னெறி உள்ளிட்டவை குறித்து 7 நாட்கள் சிறப்பு கலந்துரையாடல் மற்றும் வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாநில கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்தார்.
இதனிடையே மாநில கல்லூரியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சிஅளிப்பதாக மதுரையை சேர்ந்த மாணவி தெரிவித்துள்ளார். தமிழ்துறையில் சேர்ந்துள்ளதாக தெரிவித்த அம்மாணவி, தமிழ்துறை பேராசிரியராக வர விரும்புவதாகவும் கூறினார்.சீருடை அணிந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பல வண்ணங்களில் ஆடை அணிந்து கல்லூரிக்கு சென்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தாமதமாக கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில்,  இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.