தாய்லாந்து புறப்பட்டார் கோத்தபய ராஜபக்ச?

தாய்லாந்தில் விசா இன்றி 90 நாட்கள் தங்கியிருக்க முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறொரு நாட்டில் நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும் வரை இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு…

தாய்லாந்தில் விசா இன்றி 90 நாட்கள் தங்கியிருக்க முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேறொரு நாட்டில் நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும் வரை இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு தமது நாட்டில் தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள கோத்தபய ராஜபக்ச, இன்றைய தினம் தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கோத்தயபய ராஜபக்சவிற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. அத்துடன், இராஜதந்திர கடவூச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர் ஒருவருக்கு தாய்லாந்தில் விசா இன்றி 90 நாட்கள் தங்கியிருக்க முடியும்.

இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையில் 2013ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இதன்படி, கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் தாய்லாந்தில் எதிர்வரும் சில மாதங்களுக்குத் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமது சொத்துக்களை தாய்லாந்தில் முதலீடு செய்யும்பட்சத்தில், தாய்லாந்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக தங்கியிருக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.