நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கல்குவாரி அனுமதி வழங்குவது ஆக்கிரமிப்பு அகற்றுவது சாலை அமைப்பது போன்ற
பல்வேறு பொதுநல வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நீதிமன்றம் என்பது நீதி பரிபாலனை நடக்கக்கூடிய இடம் இங்கு
சாலை அமைப்பது, கழிவறை கட்ட உத்தரவிடுவது நீதிமன்றத்தின் பணிகள் இல்லை.
மேலும் நீதிமன்றம் அரசின் நிர்வாக பணிகளில் விவகாரங்களிலும் தலையிட முடியாது.
சாலை, பாலம் அமைப்பது, கழிப்பறை கட்டுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளை
அணுகலாம். பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தின் மாண்புகளை குறைக்க வேண்டாம்.

இது போன்ற கோரிக்கைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்,
பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளை அணுகலாம். மேலும் இது போன்ற பொது நல வழக்குகள் என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தையும்
மாண்பையும் கெடுக்க வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.







