முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா; உதவிக்கரம் நீட்டிய சுந்தர் பிச்சை!

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோ சாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவும் இந்தியாவிற்கு கொரோனா நிதி உதவி அளிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது இந்தியாவில் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,23,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் கடந்த ஒரே நாளில் 2,771 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக பலரும் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாகுறையை நீக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர் பேட் கம்மின்ஸ் கொரோனாவால் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ரூ.37 லட்சம் நிதியாக வழங்கினார். அதேபோல கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனவுக்கு எதிராக போர்புரிந்து வரும் இந்தியாவிற்கு, கூகுள் give india, யுனிசெஃப் ஆகியவற்றுக்கு ரூ.135 கோடி நிதி அளிப்பதாக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவின் தற்போதைய நிலையை கண்டு தான் மனம் உடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு , தடுப்பூசி விழிப்புணர்வு குறித்த விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க கூடுதலாக 5 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து (microsoft)நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவும் ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், இந்தியாவை கொரோனா மிக மோசமாக அச்சுறுத்தி வரும் நிலையை கண்டு தான் மனம் உடைந்து விட்டதாகவும், அதனால் இந்தியா கொரோனாவிலிருந்து மீண்டு வர அனைத்து விதமான உதவிகளை செய்ய உள்ளதாகவும், குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க உதவவுள்ளதாகவும் அதில் குறிபிட்டிருந்தார்.

அதேபோல அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்தியாவிற்கு தேவையான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றை தடையின்றி வழங்கி உதவுவதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஸ்மார்ட் வாட்ச் மூலம் பண பரிவர்த்தனை – வங்கியின் கூல் அப்டேட்

G SaravanaKumar

தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

எல்.ரேணுகாதேவி

பட்டாணி வைத்திருந்த பையை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர்

G SaravanaKumar