கேத்ரினாவுக்கு கொரோனா.. தள்ளிப் போனது விஜய் சேதுபதியின் இந்திப் படம்

’அந்தாதுன்’ இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளப் படங்களிலும்…

’அந்தாதுன்’ இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது இந்தி படங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார். தமிழில் வெளியான ’மாநகரம்’ படத்தை சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, அடுத்து ’அந்தாதுன்’ இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற இந்தி படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில், அவர் ஜோடியாக கேத்ரினா கைஃப் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் நடிகை கேத்ரினாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கூறியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ஏப்ரல் 15 ஆம் தேதி இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்ததாகவும் கேத்ரினாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ராஜ் மற்றும் டிகே இயக்கும் வெப்சீரிஸின் படப்பிடிப்பில் மே மாத இறுதியில் பங்கேற்ப இருப்பதாகக் கூறிய விஜய் சேதுபதி, கொரோனா காரணமாக அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.