கூகுள் பே-வில் இப்போது ஹிங்லிஸ்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-களில் பயன்படுத்தப்படும் கூகுள் பே-வில், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து எழுதும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் பே, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, தெலுங்கு ஆகிய 8…

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-களில் பயன்படுத்தப்படும் கூகுள் பே-வில், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து எழுதும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் பே, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, தெலுங்கு ஆகிய 8 இந்திய மொழிகளில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஹிங்லிஸ் இணைக்கப்பட்டுள்ளதால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-களில் 9 இந்திய மொழிகளில் கூகுள் பே பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம், கூகுள் பே பயன்பாட்டாளர்களின் வசதிக்காக சில முக்கிய அம்சங்களை கூகுள் பே-வில் கொண்டு வர இருப்பதாக அறிவித்து இருந்தது. அதன்படி, தற்போது ஹிங்லிஸ் இணைப்பை கொண்டுவந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘நடிகர் அஜித் உடன் நடிக்க எப்போது வாய்ப்பு வந்தாலும் தான் நடிக்க தயார் – நடிகை நஸ்ரியா’

இந்த அறிவிப்பு குறித்து அந்நிறுவனம் கூறுகையில், ஹிங்லிஸ் என்பது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து படிக்கும் / எழுதும் தன்மை கொண்டது குறிப்பாக இந்தியர்களின் வசதிக்கானது என கூறியுள்ளது. மேலும், ஹிங்லிஸ் சேவையை பயன்படுத்த விரும்புவோர் முதலில் கூகுள் பே செயலியை புதுப்பிக்க வேண்டும் எனவும், அதனைத்தொடர்ந்து செட்டிங்ஸ்-ல் உள்ள மொழி அமைப்பை தேர்வு செய்து இந்த சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே-ல் மொழி மாற்றம் செய்யும் முறை:

1. கூகுள் பே-வின் மேல் பகுதியில் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.

2. இரண்டாவதாக அதில் உள்ள Settings பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.

3. மூன்றாவதாக Personal info பகுதியில், உள்ள மொழி அமைப்பு பகுதியில், தேவையான மொழியை தேர்வு செய்யும் பிரிவு இருக்கும், அதில் Hinglish தேர்வு செய்து பயன்படுத்தலாம். இந்த சேவையை பயன்படுத்தும்போது, ‘scan any QR code’ என்பதற்கு மாற்றாக ‘koi bhi QR scan karein’ என காட்டும். மேலும், இதுபோலவே பணம் அனுப்ப, பணம் பெற மொழி மாற்றத்துடன் காணப்படும். உதாரணத்திற்கு ‘New payment’ என்பதற்கு மாற்றாக ‘Naya payment’ என காண்பிக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.