வாட்ஸ் அப்-ல் கூகுளா? – அந்த கூல் அம்சம் என்ன?

கூகுளில் தேடுவதைப் போல வாட்ஸ் அப்-ல் தேடும் அம்சம் விரைவில் வெளியாகப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தொடர்ந்து பல அம்சங்கள் பயனாளர்களுக்குக் கொடுத்து அசத்தி வருகிறது. இதில் Delete…

கூகுளில் தேடுவதைப் போல வாட்ஸ் அப்-ல் தேடும் அம்சம் விரைவில் வெளியாகப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தொடர்ந்து பல அம்சங்கள் பயனாளர்களுக்குக் கொடுத்து அசத்தி வருகிறது. இதில் Delete for Everyone, ஆன்லைனில் இருப்பதை மறைப்பது (Last Seen Hide), துண்டிப்பான குரூப் கால்-ல் (Conference) மீண்டும் இணைந்துக்கொள்ளும் வசதி, பணப் பரிமாற்றம் போன்ற அப்டேட்ஸ் வாட்ஸ் அப்-ன் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.

இந்நிலையில், தனது செயலியின் தரத்தை இன்னும் உயர்த்த திட்டமிடும் வாட்ஸ் அப், தற்போது கூகுளில் தேடுவதைப் போல அருகில் இருக்கும் உணவுக் கடை, துணிக் கடை போன்றவற்றின் வணிக கணக்குகளை விரைவாகத் தேடித் தரும் அம்சத்தை கொண்டுவரப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போன் ஆகிய இரு தரப்பு பயனாளர்களும் இதைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. மேலும், வாட்ஸ் அப்-ல் பயனாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும், செயலியில் இருந்தபடியே அனைத்தையும் பயனாளர்களுக்கு கொடுப்பதற்காகவும் வகுக்கப்பட்ட புதிய வழி இது எனவும் webBetaInfo எனும் பிரபல வலைத்தள பக்கம் தகவலளித்துள்ளது.

இந்நிலையில், பிரேசில் சாவ் பாலோ எனும் நகரத்தில் மட்டும் இந்த அம்சம் வெளியாகியுள்ளது எனவும், விரைவில் அனைவருக்கும் இந்த அப்டேட் கிடைக்கப்பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.