திடீரென செயலிழந்த Google: பயனர்கள் அதிர்ச்சி!

இங்கிலாந்து, அமெரிக்காவில் கூகுள் தேடுபொறி செயல்படவில்லை என பயனர்கள் புகார் அளித்துள்ளனர். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் கூகுள். இணையதளத்தில் பல்வேறு தேடுபொறிகள் இருந்தாலும் அதில் ஜாம்பவானாக இருப்பது கூகுள்…

இங்கிலாந்து, அமெரிக்காவில் கூகுள் தேடுபொறி செயல்படவில்லை என பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் கூகுள். இணையதளத்தில் பல்வேறு தேடுபொறிகள் இருந்தாலும் அதில் ஜாம்பவானாக இருப்பது கூகுள் தேடுபொறியாகும். இந்நிலையில், நேற்று (மே. 1) உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூகுள் தேடுபொறி செயல்படவில்லை என பயனர்கள் புகார் அளித்தனர்.

பயனர்கள் உட்பட பல ஆதாரங்களில் இருந்து நிலை அறிக்கைகளைத் தொகுத்து செயலிழப்பைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டரின் படி Google தேடல் உட்பட Google சேவைகள் பலவும் செயல்படவில்லை என பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். டவுன்டிடெக்டரின் கூற்றுப்படி, இங்கிலாந்தில் 300க்கும் மேற்பட்டவர்கள், அமெரிக்காவில் 1,400க்கும் மேற்பட்டவர்கள் Google ஐ அணுக முயற்சிக்கும்போது சிக்கல்களை எதிர்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நியூயார்க், டென்வர், கொலராடோ மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்களில் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன.

https://twitter.com/news7tamil/status/1785866652749275165

அதேசமயம், கூகுளின் பிற சேவைகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் டாக் ஆகியவை வேலை செய்வதாக தெரிகிறது. டவுன்டிடெக்டரின் படி, அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 100 பயனர்கள் கூகுள் மேப்ஸில் சிக்கலை எதிர்கொள்வதாக தெரிகிறது. இதுகுறித்து ஏராளமானோர் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். Google down என்ற ஹேஷ்டேக்கில் கூகுள் செயலிழப்பு குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் தங்களுக்கு 502 error செய்தி காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.