முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை இடித்ததை கண்டித்து இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், முள்ளிவாய்க்கால் தூணிற்கு நேற்றிரவே அடிக்கல் நாட்டி விட்டனர் என்பதே போராட்டத்தின் வெற்றி என குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் எழுச்சிமிக்க, வலிமையான இளைஞர்கள் இலங்கை துணை தூதரகத்தை வெளியேற்றுவார்கள் என கூறினார். தொடர்ந்து, இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.







