‘குட் பேட் அக்லி’ – சிறப்பு போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் அஜித் குமார்,  மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று…

நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார்,  மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.  ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்குப் பின் நடிகர் அஜித்,  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு,  ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர்.  இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் அஜித்துடன் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், குட் பேட் அக்லியின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.  இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன.

நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, படக்குழு  விடாமுயற்சி படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5.32 மணிக்கு வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.