GOLD RATE | இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

வெள்ளி விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை அதிகரித்து, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரையில், நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.