Gold Rate Today | ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.1,560 உயர்வு… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை கடந்த 2 தினங்களாக தொடர் ஏற்றத்தை சந்தித்து வந்தது.

அந்த வகையில், தங்கம் விலை நேற்று முன்தினம் (ஜுன் 11) கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.72,160-க்கும்  விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்கத்தின் விலை நேற்று (ஜுன் 12) கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.72,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் (ஜுன் 13) மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.9,295க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த வெள்ளி விலை, இன்று உயர்ந்தது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.