வடக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரை மற்றும் அதை ஒட்டிய கடலோர ஒடிசாவில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 7 நாட்களுக்கு தென் மேற்கு பருவ மழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வும் மைதியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் 24 மணி நேரத்தில் 115.6 மிமீ முதல் 204.4 மிமீ வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







