Gold Rate Today | தொடர் சரிவில் தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

இதையும் படியுங்கள் : நாமக்கல்லை உறைய வைத்த மூதாட்டி கொலை வழக்கு – இருவர் கைது!

அதன்படி, தங்கம் விலை கடந்த 7ம் தேதி சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கும், கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனையானது. தொடர்ந்து, தங்கம் விலை நேற்று (ஜுன் 9) கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.71,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வாரத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா? - News7 Tamil

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.118-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,18,000-க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் (ஜுன் 10) சற்று குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.119க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,18,000க்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.