GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை 31-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே தங்கம் விலை நேற்று காலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில் நேற்று மாலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல ஏற்றம் கண்டுவந்த வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.