தங்கம் விலையானது நாள்தோறும் புது புது ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலையானது, கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,890-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன் படி கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







