பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலி உடல் நலக்குறைவால் காலமானார்.

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு (எ) தாமோதிரன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள தாமுவின் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பொதுமக்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளால் பிரபலமான செஃப் தாமு, சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்தவர் உள்குத்து கள்ளப்படம் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

2010-ம் ஆண்டில், 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் வரும் குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே அதிக அளவில் பிரபலமானவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.