சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று (அக்டோபர் 24, 2026) காலை 08:30 மணி அளவில் அதே பகுதியில் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக’ நிலவியது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவக்கூடும் என்று கூறப்பட்டது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, இன்று (25.10.2026) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மேலும் வலுப்பெற்று 26.10.2026 தேதியில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாகவும் மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணாமாக, தமிழ் நாட்டில் இன்று தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய அதி கன மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் புதுவையிலும் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், 20 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையுடன் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதியிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.




