GOLD RATE | மீண்டும் குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன…….?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

தங்கம் விலையானது நேற்று காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது. அதன் படி, தங்கம் விலை நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,670-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன் படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.