தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,030-க்கும் சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை பிற்பகலில் ஏற்றம் கண்டுள்ளது. அதன் படி தங்கம் விலை கிராமுக்கு ரூ. 170 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 13,200-க்கும் சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ 1,05,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்த நிலையில் பிற்பகலில் கிராமுக்கு ரூ.5-ம் கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




