தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. அத்னபடி, சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1.06 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்று காணப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




