சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு, தங்கம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து ஆட்டம் காட்டியது. இருப்பினும், தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது.
இதனிடையே நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனையானது. மீண்டும் மாலையில் தங்கம் விலை உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1040 உயர்ந்து ரூ. 1,14,500-க்கும் விற்பனையானது. இ
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.285-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







