உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் மவாட்டம், வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் துவங்கியது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும்.
4 வது வார சிலுவை பாதை ஊர்வலம் நிகழ்ச்சி அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. மேல் கோவிலிருந்து பழைய மாதா கோவில் வரை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
—அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: