தங்கம் விலை மேலும் உயர்வு – இன்றைய விலை நிலவரம் என்ன ?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.61ஆயிரத்து 960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.61ஆயிரத்து 840க்கு விற்பனை செய்யபட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7ஆயிரத்து 745க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.61ஆயிரத்து 960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.