ஏறுமுகத்தில் தங்கம் விலை – மூன்றே நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 உயர்வு

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டும், இறக்கம் கண்டும் வருகிறது. மே மாதம்…

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டும், இறக்கம் கண்டும் வருகிறது. மே மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கத்தின் விலை சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க விரும்பும் இல்லத்தரசிகள், நகைக்கடைகளுக்குச் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,000-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,750-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, ரூ.80.20-க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 அதிகரித்து, ரூ.46,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி ஒரு கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து, ரூ.83.70-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், மூன்றே நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடந்துள்ள இல்லத்தரசிகள், தங்கத்தின் விலை எப்போது குறையும் என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.