GOLD PRICE | தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக சற்று உயர்ந்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 உய்ர்ந்துந்து, ஒரு கிராம் ரூ.11,715-க்கும், சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.93,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி 1 கிராம் ரூ.10 குறைந்து ரூ.165-க்கும், 1 கிலோ ரூ.10,000 குறைந்து ரூ.1.65 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.