தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில தினங்களாக ஒரே நாளில் இரண்டு முறை மாற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,700-க்கும் ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்து.
அதேபோல வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒருகிராம் ரூ.13,560-க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் சில்லறை வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




