தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590-க்கும் சவரனுக்கு ரூ.760 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2320 குறைந்துள்ளது.
தொடர்ந்து 12வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.




