சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனையாகிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது .திருமணம் போன்ற வீட்டு விஷேங்களுக்கு தங்கம் அதிகமாக வாங்கப்படுவதோடு, தற்போது தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வந்தது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர தொடங்கியது.
கொரோனா பரவலுக்கு பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் பவுன் ஒன்றிக்கு ரூ.38 ஆயிரத்தில் இருந்து. இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது.
அதிலும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது. பிறகு ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் சற்று குறைந்து, 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 42 ஆயிரத்து 704 ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 42 ஆயிரத்த்து 880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து 74.80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- பி. ஜேம்ஸ் லிசா









