தங்கம் விலை மீண்டும் குறைவு…இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்து ரூ. 57,760 விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாகவே தங்கம் விலை அவ்வப்போது ஏறும், இறங்கும். ஆனால், கடந்த மாதம் 16ம் தேதி ஒரு சவரன்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்து ரூ. 57,760 விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாகவே தங்கம் விலை அவ்வப்போது ஏறும், இறங்கும். ஆனால், கடந்த மாதம் 16ம் தேதி ஒரு சவரன் ரூ.57,000 கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னரும், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.58,000 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. மேலும், தங்கம் விலை கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59,000 கடந்து புதிய உச்சம் பெற்றது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.

இதையும் படியுங்கள் : “தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்” – இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உறுதி!

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.58,200 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.